தஞ்சை வடபத்திரகாளி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

பூஜையை சூரியனார் கோவில் ஆதீனம் நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
வடபத்திரகாளி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
வடபத்திரகாளி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் வடக்கு வாசல் கேசவதீஸ்வரர் உடன் உறை ஞானாம்பிகை சமேத கோவிலில் உள்ள வட பத்திரகாளி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடை பெற்றது.

பூஜையை சூரியனார் கோவில் ஆதீனம் நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

விழா தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சுப்பிமணியன் தலைமையில் நடை பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கோவில்கள் கூட்ட மைப்பின் தேசிய தலைவர் சந்திரபோஸ்பெருமாள், தமிழ்மாநில முதன்மை செய லாளர் ஆதிநெடுஞ்செழியன் , டாக்டர் பழனிகுமார், கண்ணன், கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் சம்பத் , மாவட்ட துனைசெயலாளர் மோகன், மையகுழு உறுப்பினர் ராஜா , மாநகர தலைவர் பாலாஜி , மாநகர செயலாளர் ஸ்ரீ மதுரா குருப்ஸ் மணி மாநகர செயற்குழு உறுப்பினர்கள் மேலவீதி சிங்காரம், வடக்கு வாசல் கண்ணன், ராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் பெருந்திரளான பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com