விஷம் குடித்த கூலித்தொழிலாளி சாவு

வீட்டில் தனியாக இருந்த கஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
விஷம் குடித்த கூலித்தொழிலாளி சாவு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நந்தி மங்கலத்தை அடுத்த எம்.காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). கூலித் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது.

கடந்த 3மாதமாக அவர் சற்று மனநிலை பாதிப்புடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com