சிலிண்டர் வெடித்து தொழிலாளி படுகாயம்

திண்டுக்கல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தொழிலளி படுகாயம் அடைந்தார்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னாளபட்டி:

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 55). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தானாகவே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்.

இன்று காலையில் கேஸ் சிலிண்டரில் சமையல் செய்ய அடுப்பை பற்றவைத்தார். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ பிடித்து சிலிண்டர் வெடித்தது.

இதில் வீட்டில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது.  அருணாசலத்திற்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com