நாங்குநேரி அருகே தொழிலாளி மாயம்

லெனின்சிங் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நாங்குநேரி அருகே தொழிலாளி மாயம்
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மாயநேரியை சேர்ந்தவர் லெனின்சிங் (வயது 32). தொழிலாளி. கடந்த 17-ந் தேதி இவர் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான லெனின்சிங்கை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com