கோவையில் தொழிலாளி பலி

கதிரேசன் பட்டணம் அருகே வந்த போது சாலையை கடக்க முயற்சி செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை மோதியது எந்த வாகனம்? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தொழிலாளி பலி
Published on

கோவை,

கோவை மதுக்கரை சீராப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சேலம்-பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். பட்டணம் அருகே வந்த போது சாலையை கடக்க முயற்சி செய்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கதிரேசன் மீது மோதியது. பின்னர் நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை மோதியது எந்த வாகனம்? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com