அம்பை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி- இன்று காலை உடல் மீட்பு

ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் ஆற்றில் மூழ்கி மாயமானார். அம்பை தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு மாதத்தில் 6 பேர் இறந்துள்ளனர்.
அம்பை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி- இன்று காலை உடல் மீட்பு
Published on

சிங்கை:

சங்கரன்கோவிலை சேர்ந்த தொழிலாளி கோமதிநாயகம் (வயது 40) என்பவர் தனது உறவினர்கள் சுமார் 40 பேருடன் நேற்று அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் திடீரென ஆற்றில் மூழ்கி மாயமானார்.

இது குறித்து தகவலறிந்ததும் தீயணை ப்புத்துறையினர் விரைந்து சென்று நேற்று இரவு வரை அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணியை தொடங்கினர்.

அப்போது கோமதி நாயகம் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய அம்பை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, அம்பை தாமிரபரணி ஆற்றில் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் இளம்பெண்கள், இளைஞர்கள் உள்பட கோமதிநாயகத்துடன் சேர்த்து 6 பேர் இறந்துள்ளனர். தாமிர பரணி ஆற்றுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com