

கோவை:
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வீட்டின் அருகே சலவை தொழில் செய்து வரும் ரவிக்குமார் (வயது 44) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த ரவிக்குமார் சாக்லெட் மற்றும் பிஸ்கட் தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டார். இதனால் பயந்த ரவிக்குமார் சிறுமியை வெளியே அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு சென்ற சிறுமியின் ஆடையில் ரத்த கறை இருப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் சாக்லெட், பிஸ்கட் கொடுத்து 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ரவிக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.