கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு நீச்சல்குளம்- அமைச்சர் திறந்து வைத்தார்

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானை உள்ளது.ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் நீச்சல்குளத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவிலில் நீச்சல்குளத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார்.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானைக்கு கோவில் வளாகத்திலேயே நன்கொடையாளர் ஏற்பாட்டில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு கான்கீரிட் தளமும், நீச்சல் குளம் கட்டப்பட்டு பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீச்சல் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் ஆறுமுகம், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com