தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தியாகதுருகம் அருகே  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் புதிய கோபுரம் கட்டி புனரமைக்கவும், இதேபோல் அருகில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள் ஆகிய கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்கள் புனரமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து கோவில்க ளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொ ட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

மேலும் நேற்று காலை பிம்பசுத்தி, ரக்ஸாபந்தனம், நாடி சந்தானம் ஆகிய பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பட்டு விநாயகர், முருகன், பெருமாள், மாரியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனையடுத்து மூலவர் சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குடியநல்லூர், தியாகை, கொங்கராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை அறநி லையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com