கூடுவாஞ்சேரியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்  எம்.கே. தண்டபாணி சிலை திறப்பு

எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கூடுவாஞ்சேரியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்  எம்.கே. தண்டபாணி சிலை திறப்பு
Published on

கூடுவாஞ்சேரி:

காட்டாங்கொளத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது.

செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம். எல்.ஏ. , நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

முன்னதாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து எம்.கே. தண்டபாணி நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,கூடுவாஞ்சேரி எம்.கே.டி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com