கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரன்(49) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி டவுன் பகுதியில்  பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் ரோந்து சென்றனர், அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.

போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ்(வயது 35), தங்கராஜ்(44), சுரேஷ்(35), ராஜு (35), மணி (35), சதீஷ்குமார் (31) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல மகாராஜா கடை போலீசார் மேல்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரன்(49) என்பவரை கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்ற ரிஸ்வான் (25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com