கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி

கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலியானார்.
பலியான ராதாகிருஷ்ணன்.
பலியான ராதாகிருஷ்ணன்.
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). வெங்காய வியாபாரி.  இவர் இன்று காலை 6.30  மணி அளவில் காடு உத்தன பள்ளியிலிருந்து கிராமங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் ,

அப்போது தண்டவாளத்தை கடந்து சென்ற போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பயணிகள்  ரெயில் ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓசூர் ரயில்வே போலீசார் விரைந்து வந்து ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி வெங்காய வியாபாரி  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com