ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்து பெண் பலி

ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்து பெண் பலியானார்.
.
.
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள புதுகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்.  இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). விவசாயி. கடந்த 20ந் தேதி இவர் 

விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி இறந்தார். 

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com