கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு, போக்குவரத்து முடக்கம்

முழு ஊரடங்கு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
வெறிச்சோடிய வீதி(கோப்பு படம்)
வெறிச்சோடிய வீதி(கோப்பு படம்)
Published on

கிருஷ்ணகிரி:

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இன்று கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ் ணகிரி, ஓசூர், பர்கூர், வேப்பனப் பள்ளி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, சூளகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, குருபரப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பால், மெடிக்கல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருந்தன.

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மாவட்டம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com