ஐடிஐ மாணவி பாலியல் பலாத்காரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது 15 சிறுமியை அதை பகுதியை சேர்ந்த வாலிபர் அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது15 சிறுமி. இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் (ஐடிஐ) தொழிற் பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து  வருகிறார். 

 இந்த நிலையில் இந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதனால் ஆசை வார்த்தை கூறி மாணவியை அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  அலெக்ஸ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. 

  இது குறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார்.  தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com