முறைகேடாக மதுவிற்ற 3 பேர் கைது

மத்தூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்  அருகே கொடமாண் பட்டி பகுதியில் தாபா ஒட்டல் நடத்தி வருபவர் மோகன் (வயது 40). இவர் அரசு அனுமதியின்றி 50- மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.

இந்தநிலை அப்பகுதியில் ரோந்து சென்ற மத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக் குமார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அதேபோல் சிங்காரப் பேட்டை பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். இதில் மிட்டப் பள்ளி பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் அவரது வீட்டில் 50 மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். 

அதே போல் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவர் வீட்டில் 50 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.இருவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து  மதுபாட்டி ல் களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com