ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டதில் ரூ.8.53 லட்சம் வசூலாகியிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி  நடந்தது.

 கோவிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை நடந்த இந்த பணியின் முடிவில், மொத்தம் 8 லட்சத்து 53 ஆயிரத்து 602 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com