ஓசூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு

ஓசூரில்பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
.
.
Published on

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கே.சி.சி நகரை சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி கற்பகம் (வயது54). இவர் தனது பேத்தி பூஜா என்பவருடன் ஒசூர் ரெயில்வே நிலையம் அருகே உள்ள  கிளினிக் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் நடந்து வந்த நபர்  கற்பகம் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க செயினை பிடுங்கி சென்று விட்டனர்.

இது குறித்து அவர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com