காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலியானார்.
.
.
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி  அருகே சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் பிரபு (வயது 30). இவர் காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சோக்காடி பழைய பையனப்பள்ளி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் பிரபு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு, பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com