கடன்தொல்லையால் பெயிண்டர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கடன்தொல்லையால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜசேகர்.
ராஜசேகர்.
Published on

பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தீர்த்த கிரிப்பட்டி ஏரியில்  வாலிபர் பிணமாக கிடந்தார். 

நேற்று அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பட்லப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர். 

இதுகுறித்து அவர் அளித்த புகார்படி சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், டி.எஸ்.பி., தங்கவேலு, பர்கூர் இன்ஸ் பெக்டர் சவிதா ஆகியோர் விரைந்தனர். 

விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது25)என்பதும் அங்கு சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வந்ததும் தெரிந்தது.  மேலும்தொழிலில் நஷ்டம் அடைந்ததால் 1 மாதத்திற்கு முன் தனது அக்கா வீடு உள்ள பட்லப்பள்ளியில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்ததும் தெரிந்தது. 

ராஜசேகரின் அக்கா குடும்பத்தினர் அனைவரும் பெங்களூரில் தங்கியுள்ள நிலையில் பட்லப்பள்ளியில் உள்ள அக்கா வீட்டில் ராஜசேகர் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை தீர்த்தகிரிபட்டி ஏரியில் ராஜசேகர் சடலமாக கிடந் துள்ளார். இதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள், வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக் கப்பட்டன. 

அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகே மது பாட் டில்கள் மற்றும் சிகரெட் துண்டு உள்ளிட்டவை இருந்தது.

 குடிபோதையில் நண்பர் களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை  செய் தார்களா? கடன் தொல் லையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பர்கூர் போலீசார் விசாரித்தனர்.  போலீசாரின் விசாரணையில் ராஜசேகர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ராஜசேகரின் உடலை பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு பர்கூர் போலீசார் அனுப்பி வைத் தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com