கோம்பு பள்ளம் தூர் வாரும் பணிகள் தொடக்கம்

குமாரபாளையம் நகரா ட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் சாக்கடை பள்ளம் தூர் வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த தூர் வாரும் பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது.
கோம்பு பள்ளம் தூர் வாரும் பணிகள் தொடக்கம்
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகரா ட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் சாக்கடை பள்ளம் தூர் வாரப்படாமல் இருந்தது.நகராட்சி சேர்மன் உத்தரவின் பேரில் இந்த பள்ளம் தூர் வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் சேர்மன் விஜய்கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த தூர் வாரும் பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது. இதே போல் பாலக்கரை மற்றும் கம்பன் நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடம் கட்டுமான பணியை சேர்மன் பார்வையிட்டார்.

இவர்களுடன் பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ராஜ், தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com