அய்யலூர் அருகே கடத்தப்பட்ட மாணவி மீட்பு

அய்யலூர் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவியை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அய்யலூரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (வயது 22) என்பவர்தான் மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் தேடி வருவதை அறிந்ததும் மாணவியை மீண்டும் அய்யலூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு அவரது வீட்டுக்கு செல்லுமாறு கூறி வாலிபர் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் மாணவி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்-கப்பட்டார். அவரை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com