17 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த டிரைவர்

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார்.
17 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த டிரைவர்
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது சிறுமிக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ேதாட்டத்தில் வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமி வீட்டிற்கு வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமியை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த டிரைவர் சிறுமியை சங்கம்பாளையத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com