சாலைபோடும் பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு

புகழூர் நகராட்சியில் சாலைபோடும் பணிகள் ஆய்வு மண் சாலைகளை தார் சாலைகளாக போடப்படும் பணி
சாலைபோடும் பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு
Published on

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தரம்பாள் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை போடப்படும் பணியினையும், சுந்தரம்பாள் நகர் வடக்கு (1,2,3) தெருக்கள் தார் சாலைகள் மற்றும் 23-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகர், வீனஸ் நகர் மற்றும் சிந்து நகர் பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக போடப்படும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் மலர்கொடி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமங்கலி நந்தா, ராமு கணேஷ் ,நகராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com