வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்

வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானார்மனைவி போலீசில் புகார் அளித்தார்
வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்
Published on

கரூர்:

கரூரில் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளி மீண்டும் வீடு திரும்பா ததால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். கரூர் அருகே, மணவாடி, பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவி கோகிலா கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com