குளித்தலையில் பள்ளி கழிப்பிடத்திற்கு சென்ற மாணவியை பாம்பு கடித்தது

சத்தியம்மா சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது.
குளித்தலையில் பள்ளி கழிப்பிடத்திற்கு சென்ற மாணவியை பாம்பு கடித்தது
Published on

கரூர்

குளித்தலை அடுத்த, பாலவிடுதி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி போதும்பொன்னு. இவர்களுக்கு, சத்தியம்மா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர் சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளியில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் சக்தியம்மா பள்ளிக்கு சென்றார்.

பின் மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது. இதனால் வலி தாங்கமுடியாமல், சத்தியம்மா வகுப்பறைக்கு ஓடி வந்தார்.

இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மோகன்ராஜ், மாணவியின் பெற்றோ ருக்கு தகவலளித்தார். பின் சந்தியம்மாவை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவி சந்தியம்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com