குளித்தலை பகுதியில் கடும் பனிமூட்டம்

குளித்தலை பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்
குளித்தலை பகுதியில் கடும் பனிமூட்டம்
Published on

கரூர்:

குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஆங்காங்கே காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் நேற்று முதல் குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால், காலையில் வேலைக்குச் செல்லும் விவசாய கூலித் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை தெரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்கை ஒளிர விட்டு வாகனத்தில் செல்கின்றனர். தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்கள், காய்கறிகள் கருகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com