வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை

வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை
Published on

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளம் வரும்போது, கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் தீவிபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். காட்டினார்கள். இதில் பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com