புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் - அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் - அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
Published on

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறையாண்மையையும், சமநல சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குநர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (பேப்பர் புரொடக்சன்) மகேஷ், துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com