அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு - புகழூர் தி.மு.க. சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பெட்டகம்

பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு - புகழூர் தி.மு.க. சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பெட்டகம்
Published on

வேலாயுதம்பாளையம்

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் புகழூர் நகரக் தி.மு.க. சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது, புகழூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள், நடு நாணப்பரப்பு நகராட்சி துவக்கப்பள்ளி, குறுக்குபாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், செல்வகுமார், நந்தா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் அண்ணாவேலு, நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, வார்டு தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com