தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு

தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்சமயல் செய்த போது நடந்த சம்பவம்
தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு
Published on

கரூர்

கரூர் மாவட்டம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்படடி பகுதியை சேர்ந்த, மச்சநாயக்கர் மனைவி வெள்ளையம்மாள் (வயது 72). இவர், சம்பவத்தன்று வீட்டில் ஸ்டவ் அடுப்பில் வெந்நீர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென வெள்ளையம்மாள் உடையில் தீப்பிடித்தது. இதில், பலத்த தீக்காயமடைந்த வெள்ளையம்மாள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com