கரூர் டி.என்.பி.எல். ஆலையில் 74-வது குடியரசு தின விழா

கரூர் டி.என்.பி.எல். ஆலையில் 74-வது குடியரசு தின விழா

கரூர் டி.என்.பி.எல். ஆலையில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது அனை–வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் புகழூ–ரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை–யில் நடந்த நாட்டின் 74-வது குடியரசு தின விழா–வில் சிறப்பு விருந்தினராக உற்பத்தி மற்றும் திட்டம் ஒருங்கி–ணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன் கலந்து–கொண்டு தேசிய கொடி–யேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாதுகாவலர்களின் அணிவகுப்பை உதவி மேலாளர் பாதுகாவஸ்) சங்கிலிராஜன் மற்றும் உதவி அதிகாரி (பாதுகாவஸ்) செந்தில்குமார் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்.

அவர்களின் அணிவகுப்பு மரியாதையை வரதராஜன் ஏற்றுக்கொண்டு சிறப்புரை–யாற்றினார். நிகழ்ச்சி முடிவில் துணை பொது மேலாளர் (பாதுகாப்பு மற்றும் பாது–காவல்) ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆலையின் உயர் அதிகாரிகள், தொழி–லாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனை–வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com