குளித்தலை அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

குளித்தலை அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யபட்டார் வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார்
குளித்தலை அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
Published on

கரூர்,

குளித்தலை அடுத்த உடையாபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 30). லாரி டிரைவர். இந்நிலையில் கடந்த 15 -ந் தேதி இரவு வின்சென்ட், இவரது தந்தை மரியதாஸ் (73), தங்கை டைசி ராணி (29) ஆகியோர் நிலபிரச்சனை காரணமாக தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் வின்சென்ட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வின்சென்ட் மனைவி யோகம்மேரி தோகைமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மரியதாஸை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டைசி ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com