தண்ணீர் தொட்டியில் விழுந்த ஊழியர் சாவு

தண்ணீர் தொட்டியில் விழுந்த ஊழியர் உயிரிழந்தார் அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
தண்ணீர் தொட்டியில் விழுந்த ஊழியர் சாவு
Published on

கரூர்:

கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் 4வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 47). இவர் தாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மது மயக்கத்தில் இருந்த ராமமூர்த்தி, வீ ட்டிலிருந்த தரைத்தள தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயரிழந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தி சடலத் தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com