1,611 மையங்களில் 31,365 பேருக்கு தடுப்பூசி

1,611 மையங்களில் 31,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது34-வது தடுப்பூசிமுகாம் நேற்று நடைபெற்றது.
1,611 மையங்களில் 31,365 பேருக்கு தடுப்பூசி
Published on

கரூர்:

கரூர் மாவட்டத்தில் 34-வது தடுப்பூசிமுகாம் நேற்று நடைபெற்றது. 1,611 மையங்களில் 2,919 பேர் முதல் தவணை, 4,335 பேர் 2ம் தவணை, 24,111 பேர் பூஸ்டர் என மொத்தம் 31,365 தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 8,53,600. இதில் 8,30,694 என 97.32 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளும், 3,066 பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். முகாமில் செவிலியர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் தலா 433 பேர், ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 866 பேர் என மொத்தம் 2,598 பேர் பணியாற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com