திருவட்டார் அருகே வாலிபர் மர்மச்சாவு

சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.
திருவட்டார் அருகே வாலிபர் மர்மச்சாவு
Published on

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com