நாகர்கோவிலில் வள்ளலார் 201-வது அவதார தின விழா

2-ந் தேதி நடக்கிறது.அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
நாகர்கோவிலில் வள்ளலார் 201-வது அவதார தின விழா
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் வள்ளலார் பேரவையில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளின் 201-வது அவதார தினவிழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அருட்ஜோதியை, மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்.

போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், சந்திர சேகரன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com