கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கைஉரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

மார்த்தாண்டம்:

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்வதற்கு தூண்டிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதற்கு காரணமான டாக்டர்களை போலீசார் கைது செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தி வரு கிறது. கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதிய விடுப்பு கொடுத்தும், போதிய கவுன்சிலிங் கொடுத்தும் வரும் காலங்களில் இத்த கைய சம்பவங்கள் நடை பெறுவதை தவிர்க்க வழிவகுக்க வேண்டும். மேலும் போலீசார் குற்றம் செய்தவர்கள் தப்பிக்காத அளவுக்கு பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com