இருளப்பபுரத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பூட்டிய அறையில் பிணமாக கிடந்தார்ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் தெருவை சேர்ந்த வர் நாகராஜன். இவரது மகன் கவுதமன் (வயது 24). இவர் சென்னை யில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வந்தார். தற்பொழுது கல்லூரிக்கு செல்லாமல் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார்.

இந்நிலையில் கவுதமன் கடந்த சில நாட்களாக சரிவர வீட்டில் யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கவுதமன் தனது அறைக்கு சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்பட வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் மகனை பலமுறை அழைத் துப் பார்த்தும் கதவு திறக்கப் படாததால் கதவை உடைத்து பார்த்தபோது கவுதமன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கவுதமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கவுதமன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான கவுத மனின் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவி னர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com