கன்னியாகுமரியில் இன்று கடல் நீர்மட்டம் "திடீர்" உயர்வு

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 1 மணி நேரம் தாமதம்காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.
கன்னியாகுமரியில் இன்று கடல் நீர்மட்டம் "திடீர்" உயர்வு
Published on

கன்னியாகுமரி:

பவுர்ணமியையொட்டி இன்று காலையில் கன்னியா குமரியில் "திடீர்" என்று கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பா கவும் காணப்படுகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை.

இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறை நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர். இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொ டர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகா னந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com