திருவட்டார் அருகே பந்தல் தொழிலாளி தவறி விழுந்து சாவு

திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
திருவட்டார் அருகே  பந்தல் தொழிலாளி தவறி விழுந்து சாவு
Published on

கன்னியாகுமரி:

திருவட்டாரை அடுத்த செங்கோடி மாத்தாரை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59 ), பந்தல் தொழிலாளி.

இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிதாஸ், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிதாஸ் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிதாசின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com