தடைக்காலம் முடிய இன்னும் ஒரு மாதம்: விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.
தடைக்காலம் முடிய இன்னும் ஒரு மாதம்: விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
Published on

கன்னியாகுமரி:

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந்தேதி நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூ ரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மீன்பிடி தடைக்கா லத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு களுக்கு மீன்பிடி தடைக் காலம் நீங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் விசைப்படகினர் தங்கள் விசைப்படகுகளை தீவிர மாக பழுது பார்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com