நாகர்.கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிரபல ரவுடி கைது

இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது.
நாகர்.கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிரபல ரவுடி கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பள்ளி விளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை செந்தில். இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளை செந்திலை நேற்று இரவு நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெள்ளை செந்திலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com