தக்கலையில் வீடுபுகுந்து வியாபாரிக்கு மிரட்டல்-கடை சூறை

4 பேர் மீது வழக்கு; வாலிபர் கைதுவீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.
தக்கலையில் வீடுபுகுந்து வியாபாரிக்கு மிரட்டல்-கடை சூறை
Published on

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது 70). இவர் வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் பலரும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் சிலர் கடனுக்கு வாங்குவதுண்டு. அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் சிஜோ (24) என்பவரது தாயாரும் பொருட்களை கடனுக்கு வாங்கினாராம்.

இந்த நிலையில் அஸ்வின் சிஜோவிடம், அவரது தாயார் வாங்கிய கடன் தொகையை ஜான்ரோஸ் கேட்டுள்ளார். இது அஸ்வின் சிஜோவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அஸ்வின் சிஜோ தனது நண்பர்களுடன் ஜான்ரோஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அவர்கள், வீடு புகுந்து ஜான்ரோசை கத்தியை காட்டி மிரட்டிய தாகவும் கடையில் உள்ள பொருட்களை சூறையாடியதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்திய தக்கலை போலீசார், அஸ்வின் சிஜோ, வினீத்(24), அபினேஷ் (19), ஆகாஷ் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் அபினேஷ் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com