ஈடன்ஸ் பல் மருத்துவமனையின் 16-வது ஆண்டு தொடக்க விழா

மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
ஈடன்ஸ் பல் மருத்துவமனையின் 16-வது ஆண்டு தொடக்க விழா
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மற்றும் முகசீர மைப்பு மருத்துவமனையில் 16-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் கற்கோவில் ஆலய போதகர்கள் விக்டர் ஞானராஜ், ராஜ ஜெய்சிங், ஜெரோம் ஆகியோர் ஜெபம் செய்தனர். மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.

குழந்தைகள் நல டாக்டர் மனேஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் ஸ்டெலின் தினக்ஸ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com