டிரைவரை கத்தியால் குத்திய கட்டிட தொழிலாளி கைது

முன்விரோதத்தில் மோதல்ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர்.
டிரைவரை கத்தியால் குத்திய கட்டிட தொழிலாளி கைது
Published on

தக்கலை:

தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 46). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (25). அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும், அஜய் டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அருண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜய், அவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்டமோதலில் அருண் மற்றும் அஜய் ஆகிய இருவரும் ஒருவரை யொருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்ட னர். இந்தமோதல் சம்பவம் தொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் தனித் தனியாக புகார் கொடுக் கப்பட்டது. அருண் கொடுத்த புகாரின் பேரில் அஜய், ராஜ கோபாலன், சேகர் ஆகியோர் மீதும் அஜய்கொடுத்த புகாரின்பேரில் அருண் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்நிலையில் அஜய்யை கத்தியால் குத்திய அருணை போலீசார் கைது செய்தனர். அஜய் படுகா யங்களுடன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை ெபற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com