குலசேகரம் அருகே போதை பொருள் விற்பனை செய்த வாலிபர் கைது

போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
குலசேகரம் அருகே போதை பொருள் விற்பனை செய்த வாலிபர் கைது
Published on

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையில மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அதிரடியாக கல்லடி மாமூடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் (வயது 40) என்பவர் புகையில விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

உடனே போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்த போது 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

அவருக்கு எங்கியிருந்து புகையிலை பாக்கெட் வருகிறது எந்த பகுதியில் விற்பனை செய்து வந்தார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com