களியக்காவிளை அருகே கேரளாவுற்கு கனிம வளங்கள் கடத்த முயன்ற 4 வாகனங்கள் பறிமுதல்

தனிப்பிரிவு போலீசார் அதிரடிசட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
களியக்காவிளை அருகே கேரளாவுற்கு கனிம வளங்கள் கடத்த முயன்ற 4 வாகனங்கள் பறிமுதல்
Published on

கன்னியாகுமரி:
குமரிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கனிமவளங்களை நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகமாக கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடக்கிறது.

கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வானத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை குமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கனிமவளங்களை அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? உரிமையாளர் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com