குலசேகரத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பஜனை மடத்தில் ஆராதனை

குலசேகரம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு ஆராதனை திருவிழா குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.
குலசேகரத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பஜனை மடத்தில் ஆராதனை
Published on

கன்னியாகுமரி:

குலசேகரம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு ஆராதனை திருவிழா குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலையில் 501 லிட்டர் பால் அபிஷேகமும் அதை தொடர்ந்து பஜனை, ஆரத்தி, அருளுரை, கூட்டு பிரார்த்தனை, தியானம், புஷ்பாபிஷேகம் நடந்தது.

பாலபிஷேகம், ஆரத்தி, புஷ்பாபிஷேகம் பக்தர்கள் தங்களாகவே பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர், தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது தரிசன நிகழ்ச்சியில் சுவாமி பத்மேந்திரா மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com