இரணியல் அருகே தொழிலாளி மர்மச்சாவு

ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே தொழிலாளி மர்மச்சாவு
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் காளி தாஸ் என்பவருக்கு சொந்த மான இடத்தில் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார்.

இங்கு கோவை ரத்தின புரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 40) வேலை பார்த்து வந்தார். அவர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு கார்த்திகேயன் தூங்க சென்று விட்டார். காலை வெகுநேரம் ஆகியும் எழும்பாததால் ஆறுமுகம் ரூமில் சென்று பார்த்து உள்ளார். அப்போது கார்த்திகேயன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து இரணியல் போலீசில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com